உடுமலை அம்மா உணவகம் திறப்பு எப்போது?

By செய்திப்பிரிவு

உடுமலையில் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகம், எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால், கடந்த ஆண்டு நகராட்சிப் பகுதியிலும் அம்மா’ உணவகங்களை திறக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி உடுமலை நேதாஜி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில், அம்மா உணவகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா கூறும்போது, ‘‘பணிகள் முடிந்து 4 மாதங்கள் ஆகின்றன. அரசின் உத்தரவு வந்ததும் திறக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்