தொழிலாளர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.146 கோடி: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

காப்பீட்டு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவ மனைகளுக்கு ரூ.145.98 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் நடந்த மேதின விழாவில் பங்கேற்று ஊரக தொழி்ல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் பேசியதாவது:

தமிழகத்தில் இதுவரை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் 63.05 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அமைப்பு சார்ந்த துறைகளில் உள்ள தொழிலாளர்கள் 26,85,437 பேர் காப்பீடு பெற்றுள்ளனர். இதன் மூலம் 1.04 கோடி பேர் தொழிலாளர்கள் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 9,35,559 உள்நோயாளிகளும், 2.67 கோடி வெளி நோயாளிகளும் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் மூலம் பயனடைந்துள்ளனர். அதுமட்டு மின்றி காப்பீட்டாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு மற்றும் அதி சிறப்பு சிகிச்சைகள் பெற்றதற்கு, ரூ.145.98 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

13 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்