2 இடங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்

By செய்திப்பிரிவு

சென்னையில் இரண்டு இடங் களில் அடுக்குமாடி வாகன நிறுத்து மிடங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனை அருகிலும் நுங் கம்பாக்கம் சங்கீதா உணவகம் எதிரிலும் மாநகராட்சிக்கு சொந்த மான இடத்தில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமையவுள்ளன.

அப்போலோ மருத்துவ மனைக்கு எதிரில் கடந்த மூன்று வருடங்களாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதில் 330 கார்களையும், 220 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். இங்கு வரும் வாகனங்களுக்கு டோக்கன் அளித்து கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு சுமார் ரூ.30, இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5 வசூலிக்கப்படும். சுமார் 10 கிரவுண்ட் இடத்தில் அமையும் இந்த வாகன நிறுத்துமிடத்தை அப்போலோ மருத்துவமனை மற்றும் மார்க் ஆக்சிஸ் நிறுவனங் கள் இணைந்து கட்டி வருகின்றன. இதிலிருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை மாநகராட்சிக்கு இவர்கள் அளிக்க வேண்டும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னையில் இது போன்று தனியார் வாகன நிறுத்தங்கள் இருந்தாலும், மாநகராட்சியின் முதல் முயற்சி இதுதான். இங்கு தனி யார் வாகன நிறுத்தங்களை விட குறைவான கட்டணம் வசூலிக்கப் படும்” என்றார்.

சுழற்சி முறை வாகன நிறுத்தம்

இதே போன்று நுங்கம்பாக்கம் வாகன நிறுத்துமிடத்துக்கான ஆய்வறிக்கை இறுதி செய்யப் பட்டுள்ளது.

என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் அருகிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தில் ஆகாய நடைபாதை அமைய விருப்பதால், அதனுடன் ஒருங்கிணைத்து வாகன நிறுத்து மிடம் அமைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்