பஞ்சலோக சிலை கடத்தல்: சென்னையில் 10 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் சிலை கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக அண்ணா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் தி.நகரில் அந்த ஓட்டலை சுற்றி வளைத்து ஓர் அறையில் பதுங்கி இருந்த 10 பேரை பிடித்தனர்.

அவர்கள் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் 200 ஆண்டுகள் பழமையான ஒரு அடி உயரமுள்ள பஞ்சலோக விநாயகர் சிலை, ரூ.1 கோடி மதிப்புள்ள ஆம்பிட்டோ மைன் என்ற போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 10 பேரையும் கைது செய்து நடத்தப்பட்ட விசார ணையில், அவர்கள் சென் னையை சேர்ந்த ராஜசேகர்(33), தணிகாசலம்(30), சீனிவாசன்(34), அகமது(34), சேது(30), மகேஷ்(32), சண்முகம்(26), சுயம்பு(31), ஜஸ்டின்(33), தியாகராஜன்(36) என்பது தெரிந்தது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்