வண்டலூர் பூங்காவுக்கு ஆஸ்திரேலிய பறவை ஜோடி: பள்ளி மாணவர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆஸ்திரேலிய பறவை ஜோடியை பள்ளி மாணவர் ஒருவர் தானமாக வழங்கினார்.

மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படிக்கும் கிருஷ்ணா என்ற மாணவர், ஆஸ்தி ரேலிய பறவை ஜோடியை வண்ட லூர் உயிரியல் பூங்காவுக்கு நேற்று தானமாக வழங்கினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எனக்கு பறவைகள் வளர்ப் பதில் அதிக ஆர்வம் உள்ளது. அதனால் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ‘கிரே காக்கடைல்’ என்ற பறவை ஜோடியை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தேன். எனது பெற்றோர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிடுகின்றனர். நான் பள்ளிக்கு சென்று விடுகிறேன். இதனால் இந்த பறவைகளை பராமரிக்க முடியாத தால் அவற்றை வண்டலூர் பூங்கா வுக்கு தானமாக கொடுத்துள் ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்பூங்காவில் இதே வகையைச் சேர்ந்த 20 பறவைகள் உள்ளன. இது போன்று யாராவது பராமரிக்க முடியாமல் தானமாக வழங்கினால் பெற்றுக் கொள்வோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்