முன்னாள் அதிமுக அமைச்சர் பரஞ்சோதி மீதான வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல்

By செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் அதிமுக அமைச்சரும் திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பரஞ் சோதி மீது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் வசிக்கும் டாக்டர் ராணி, திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 2011-ம் ஆண்டு பாலியல் மற்றும் மோசடி புகார் செய்திருந்தார். அந்த புகாரில், “பரஞ்சோதி தன்னை 2-வது மனைவியாக திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு ஏமாற்றி பணம், நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்ட தாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரி வித்திருந்தார்.

இந்த புகார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்ததால் நீதிமன்றத்தை அணுகி வழக்கு பதிவு செய்ய ராணி உத்தரவு பெற்றார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு ஏமாற்றுதல், மோசடி, பெண் வன்கொடுமை உட்பட 7 பிரிவு களில் பரஞ்சோதி மீது போலீஸார் 6.12.2011-ல் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அப்போது தமிழக அமைச்சராக இருந்த பரஞ் சோதியிடமிருந்து அமைச்சர் பதவி மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஆகி யவை பறிக்கப்பட்டன. திருச்சி குற்றவியல் நடுவர் எண் 4-ல் பரஞ்சோதி மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது என்பதால் இந்த வழக்கின் விசாரணையை ரங்கம் பகுதி போலீஸ் உதவி கமிஷ னர் நேரடியாக விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கை பல்வேறு போலீஸ் உதவி கமிஷனர்கள், சில மாஜிஸ் திரேட்டுகள் விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய ஆதார மான பரஞ்சோதி எழுதிய கடிதங்கள் கையெழுத்து ஒப்பீடு பரி சோதனைக்கு அனுப்பி, ஓரிரு வாரங்களுக்கு முன் முடிவுகள் பெறப்பட்டதாகக் கூறப் படுகிறது. எந்த நேரமும் கைது செய் யப்படலாம் என்ற நிலையில் கடந்த வாரம் திருச்சி நீதிமன்றத்தில் பரஞ்சோதி ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார். நேற்று இந்த வழக்கின் விசாரணை குற்றவியல் நடுவர் எண் 4-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விவரம் புகார்தாரரான ராணி தரப்பின ருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குற்றவியல் நடுவர் வேல் மயில், இந்த வழக்கை கூடுதல் மகிளா நீதிமன்றத் துக்கு மாற்றுவதாகவும் அங்கு மே 15-ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்தார். இந்த வழக்கு விவரத்தை அறிய டாக்டர் ராணி நேற்று நீதிமன்றத் துக்கு வந்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்