சாலை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

சாலை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு போக்கு வரத்து துறை அலுவலர்கள் சங்கம், மோட்டார் ஆய்வாளர்கள் சங்கம் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், இன்று பணிக்கு செல்லும்போது, அலுவலர்களும், ஆய்வாளர் களும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேட்ச் அணிந்து செல்லவுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அலுவலர் கள் சங்கத்தின் தலைவர் பி.தரணி, மோட்டார் ஆய்வாளர்கள் சங்கத் தின் தலைவர் ஜி.ஏழுமலை ஆகியோர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சாலை பாதுகாப்பு சட்ட திருத்தம் மசோதா பொதுமக்கள் மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் உள்ளது. குறிப்பாக, உரிமம் பெறுவது, வாகன பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கட்டணங்கள் உயர்த் தப்படுகின்றன. முக்கியமான விதி முறைகளும் மாற்றப்பட்டுள்ளது. பெரிய தனியார் நிறுவனங் களுக்கு முக்கியத்துவம் அளிக் கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள் ளது.

இந்த சட்ட திருத்தம் நடை முறைக்கு வந்தால், சாதாரண பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள். எனவே, இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்துகிறோம். இதனால், இன்று நாங்கள் பணிக்கு செல்லும்போது மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேட்ச் அணிந்து செல்லவுள்ளோம்.

அந்த பேட்சில் ‘‘மாநில அரசின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் சாலை பாதுகாப்பு 2015 மசோதாவை திரும்ப பெற வேண்டும்’’ என எழுதியிருக்கும். குறிப்பாக இந்த சட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்