தொலைதூரக் கல்வி முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்ட முதுகலை பட்டப் படிப்புகளுக்கான (எம்ஏ, எம்எஸ்சி, எம்காம்) தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றன. இந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் இன்று இரவு 8 மணி முதல் தெரிந்துகொள்ளலாம்.

www.ideunom.ac.in

www.unom.ac.in

ஏ-13, சி-13 ஆகியவற்றுடன் தொடங்கும் பதிவெண்கள் கொண்ட தற்போதைய பேட்ச் மாணவர்கள் மட்டும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். மறுமதிப்பீட்டுக்கான கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.750. இதற்கு ஆன்லைனில் (www.ideunom.ac.in) விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமதிப்பீடு செய்ய தகுதி யில்லாதவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தடையேதும் இல்லை. மறுகூட்டலுக்கான கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.200. மறுமதிப்பீட்டுக்கும், மறுகூட்டலுக்கும் வருகிற 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், ஜூன் மாதம் நடை பெறவுள்ள எம்.எல் (தனித்தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15-ம் தேதி ஆகும். அபராத கட்டணத்துடன் ஏப்ரல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

கல்வி

5 hours ago

மேலும்