கல்விக் கட்டணம் செலுத்தாததால் வகுப்பறையில் குழந்தைகள் அடைப்பு: திண்டுக்கல் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாததால் நேற்று இரவு வரை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பாமல் பிடித்து வைத்ததால் அதிருப்தியடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் நீதிமன்றம் எதிரே தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மாலை கல்விக் கட்டணம் செலுத்தாததால் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வீட்டுக்கு விடாமல் வகுப்பறையில் அமர வைத்தனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். கல்வி கட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை பிடித்து வைத்திருப்பதை அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மேரி பள்ளிக்கு வந்து, குழந்தைகளை விடுவித்தார். பெற்றோர்களின் போராட்டம், பள்ளி நிர்வாகம் குழந்தைகளை விடுவிக்க மறுத்ததால் பள்ளி வளாகத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை 3 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, பலமுறை எடுத்துக்கூறியும், கால அவகாசம் கொடுத்தும் பெற்றோர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை. அதனால், பெற்றோரை பள்ளிக்கு வரச்சொல்லி குழந்தைகளை வகுப்பறையில் அமர வைத்தோம் என்றனர்.

நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

43 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்