கட்சியில் மூன்று முறை மட்டுமே முக்கிய பதவிகளை வகிக்க முடியும்: இந்திய கம்யூ. தேசிய கவுன்சில் செயலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு 3 முறை மட்டுமே ஒருவரை தேர்வு செய்ய முடியும் என்று கட்சியின் தேசிய கவுன்சில் செயலாளர் ஷமி பைசி தெரிவித்தார்.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் நான்காவது நாளான நேற்று மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் தேசிய கவுன்சில் செயலாளர் ஷமி பைசி நிருபர் களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநாட்டில் பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்று அரசியல் மற்றும் கட்சி நிர்வாகம் தொடர்பான அறிக்கையை ஷமி பைசி, சுதாகர் ரெட்டி, டி.ராஜா, பரதன் ஆகியோர் தலைமை யிலான குழுவினர் சமர்ப்பித்துள் ளனர். இந்த அறிக்கை பற்றி விவாதித்து இன்று (29ம் தேதி) இறுதி முடிவு எடுக்கப்படும். தேசியக் குழு நிர்வாகிகள் தேர்வு, தேசிய பொதுச் செயலர் தேர்வு இன்று நடைபெறும். கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு இதுவரை 5 முறை தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இனிமேல், 3 முறை மட்டும் (9 ஆண்டுகள்) தேர்வு செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நிதி ஆதாரம் இல்லை

மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 16.5 சதவீதம் நிதியை குறைத்துள்ளனர். 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஆதாரம் வழங்கப்படவில்லை. கல்வி தனியார் மயமாகும் நிலைமை தொடர்வது கண்டிக்கத்தக்கது. உலகத் தரத்திலான கல்வியை மேம்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

56 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்