உடன்குடி அனல்மின் நிலைய திட்டம்: டெண்டர் ரத்து நிராகரிப்புக்கான காரணத்தை கூற முடியாது - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

By செய்திப்பிரிவு

உடன்குடி அனல்மின் நிலைய திட்ட டெண்டரில் கலந்துகொண்ட சீன நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை தொடர்புடையவர்களுக்கு கூற முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், உடன் குடியில் தலா 660 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைப் பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி டெண்டர் கோரியது. டெண்டரில் கலந்துகொண்ட சீன நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்து டான்ஜெட்கோ உத்தரவிட்டது. இதை எதிர்த்து சீன நிறுவனமான, சென்ட்ரல் சதன் சீன எலெக்ட்ரிக் பவர் டிசைன் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் கே.பிள்ளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி வாதிட்டார். டெண்டர் நிராகரிக்கப்பட்டால், அதற் கான காரணத்தை சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டுமென தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை சட்டத்தில் எந்தப் பிரிவும் கூறவில்லை. எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்ற விவரம் டெண்டருக்கான குறிப்பேட்டில் (டெண்டர் புல்லட்டீன்) வெளியிட்டால் போதுமானது. அதன்படி, மனுதாரரின் நிறுவன டெண்டர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அந்த புல்லட்டீனில் வெளியிடப்பட்டுவிட்டது என்று தெரிவித்த அட்வகேட் ஜெனரல், அதுதொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிவாரணம் பெறலாம்

இதையடுத்து, “மனுதாரர் நிறுவனம் அளித்த டெண்டர் விவரங்களில் குறைபாடுகள் இருந்ததால் அது நிராகரிக் கப்பட்டதாக டெண்டர் புல்லட் டீனில் டான்ஜெட்கோ தெரி வித்துள்ளது. எனவே, மனுதாரர் சட்டப்படி நிவாரணம் கோரி பெறலாம்” என்று தெரிவித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், இவ்வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்