திருவைகுண்டத்தில் கலவரம்: அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை - 60 வீடுகள், 4 கடைகள், 17 வாகனங்கள் சூறை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் திருவை குண்டம் அருகே அதிமுக கிளைச் செயலாளர் நேற்று மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து காமராஜர் சிலை, வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி புது மனை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வீ.பிச்சையா (57). அதிமுக கிளைச் செயலாளரான இவர், பணம் கொடுக்கல் வாங்கல் தொழி லும் செய்து வந்தார்.

நேற்று காலை 6 மணியளவில் கொங்கராயக்குறிச்சி இந்திரா நகர் பகுதியில் வட்டி வசூல் செய்யச் சென்றார். அங்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. படுகாயம் அடைந்த பிச்சையா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

60 வீடுகள் சூறை

இச்சம்பவம் அறிந்ததும் பிச்சை யாவின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு, அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருக்கும் காமராஜர் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

அப்பகுதியில் உள்ள 4 கடைகள், கொங்கராயக்குறிச்சி சர்ச் தெரு, மணல் மேட்டுத் தெரு, புது மனை தெரு, திடீர் நகர், கீழத் தெரு, மேலத்தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகளை அவர்கள் சேதப்படுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து பிரிஜ், டி.வி., பீரோ உள்ளிட்ட பொருட்களை சூறை யாடினர். 7 கார்கள், 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை வன்முறை கும்பல் நொறுக்கியது.

சர்ச் தெருவில் உள்ள ஆபிரகாம் என்பவரது கடையை சூறையாடிய கும்பல், கடையில் இருந்த ரூ. 80 ஆயிரம் பணத்தை எடுத்துக் சென்றதாக புகார் எழுந்துள்ளது. வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதில் முன்னாள் ஊராட்சித் தலைவி செல்வஜோதி காயம் அடைந்து மருந்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். மேலும், சில ருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா.துரை தலைமையில் ஏராளமான போலீ ஸார் அங்கு விரைந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். திருவை குண்டம் பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருவைகுண்டம் - வல்லநாடு இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கொங்கராயக்குறிச்சி சர்ச் தெருவைச் சேர்ந்த பள்ளித் தாளாளர் சாம் தேவசகாயம் (79), கடந்த ஆண்டு ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப் பழியாக பிச்சையா கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவைகுண்டம் பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே கடும் பதற்றம் நிலவுகிறது. புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் பாஸ்கர் கடந்த மாதம் 22-ம் தேதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒரு வார காலம் பெரும் பதற்றம் நிலவியது. திருவைகுண்டம் தாலுகா முழுவதும் பிப்ரவரி 25 முதல் இம்மாதம் 9-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை இரவு வல்லநாடு அருகே மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த, அரசு வேளாண்மை கல்லூரி காவலாளி துரைப்பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு நேற்று முன்தினம்தான் நடைபெற்றது. இதையடுத்து நேற்று கொங்கராயக்குறிச்சியில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். பழிக்குப் பழியாக நடக்கும் கொலைகளால் திருவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 min ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

42 mins ago

வாழ்வியல்

33 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்