சிறந்த விளம்பர நிறுவனங்களுக்கான மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப் விருதுகள்: சென்னையில் வழங்கப்பட்டன

By செய்திப்பிரிவு

சிறந்த விளம்பர மற்றும் படைப்பு சார்ந்த நிறுவனங்களுக்கான மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப் விருதுகள் வழங்கப்பட்டன. மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப் சென்னையில் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 50 ஆண்டு களைத் தாண்டி இயங்கி வரும் இந்நிறுவனம், சிறந்த விளம்பரம் மற்றும் படைப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலை யில் சென்னை அட்வர்டைசிங் கிளப் விருதுகள் வழங்கும் விழாவின் 3-ம் நிகழ்ச்சி நடந்தது.

அச்சு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களின் வழியே வெளியான விளம்பரங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து அந்தந்த விளம்பர நிறுவனங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப் பட்டன. சேவை சார்ந்த விளம்பரங் கள், சில்லறை வர்த்தகம், தமிழ் விளம்பரங்கள், போஸ்டர்கள், காலண்டர், டிஜிட்டல் சார்ந்த விளம்பரங்கள், கிராமப்புற மேம்பாடு, ஒருங்கிணைந்த விளம்பரங்கள், திரை மற்றும் அச்சு வேலைகள், ஊடக புதுமை என பல்வேறு பிரிவுகளின் கீழ் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த விருது வழங்கும் விழாவில் மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப்பின் தலைவர் ஸ்கந்தராஜ் பேசியதாவது:

சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கி அங்கீகரிக்கும் பணியில் சென்னை அட்வர்டைசிங் கிளப் ஈடுபட்டு வருகிறது. சென்னை அட்வர்டைசிங் கிளப் விருதுகள் வழங்கும் விழாவின் மூன்றாவது நிகழ்ச்சி “மேடீஸ் 2015” என்னும் பெயரில் இன்று நடத்தப்படுகிறது. அச்சு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களில் விளம்பரத் துறையில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரித்து வருகிறோம்.

கேரள நிறுவனத்துக்கு

இந்தாண்டுக்கான விருதுகளை பெற தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 65 விளம்பர மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்து 620 பதிவுகள் வந்திருந்தன. மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப்பின் இந்தாண்டுக்கான சிறந்த விளம்பர நிறுவனம் என்ற விருதை கேரளத்தை சார்ந்த ஸ்டார்க் கம்யூனிகேஷன்ஸ் பெற்றது. சென்னையைச் சேர்ந்த ஆர்.கே. சுவாமி பிபிடிஓ இரண்டாமிடம் பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப்பின் முன் னாள் தலைவர் விஜய் சேவியர், தற்போதைய துணைத் தலைவர் பி.சிவப்பிரசாத், செயலாளர் அன்புச்செழியன், பொருளாளர் சுரேஷ் னிவாசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்