அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இன்று தொடங்கவுள்ளன. இதை யொட்டி, வாக்குச்சாவடி மைய நிலை அலுவலர்களுக்கு நேற்று சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்போரூர் வட்டத்தில் 174, திருக்கழுக்குன்றம் வட்டத்தில் 167, செங்கல்பட்டு வட்டத்தில் 394 என மொத்தம் 735 வாக்குச்சாவடி மைய நிலை அலுவலர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய நிலை அலுவலர்களுக்கு இன்று பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறி வுறுத்தலின்பேரில், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக ஏப்ரல் 12, 26 மற்றும் மே 10, 24 ஆகிய நாட் களில் வாக்குச்சாவடி மையங் களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த முகாம்களில், ஆதார் எண் உள்ள வாக்காளர்கள் பங்கேற்று, விண்ணப்பங்களைப் பெற்று உரிய முறையில் நிறைவு செய்து வழங்க வேண்டும். அதேபோல, ஆதார் அட்டை இதுவரை வரப் பெறாமல், புகைப்படம் எடுத்துள்ளவர்கள், அதற்குச் சான்றாக வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டில் உள்ள 28 இலக்க எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து வழங்கலாம்.

இதுகுறித்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் கூறும்போது, ‘வாக்காளர் பட்டிய லில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக வாக்குச்சாவடி மைய நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பயிற்சிகள் மற்றம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்ற நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடுதோறும் சென்று உரிய பணிகளில் ஈடுபடுவர். மேலும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டி யலில் இணைக்கும் பணிகளை படிப்படியாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

14 mins ago

விளையாட்டு

6 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

39 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்