சென்னை - கும்மிடிபூண்டி ரயில் சேவை மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை கும்மிடிபூண்டி இடையேயான ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை கும்மிடிபூண்டி இடையே மின்சார ரயில்பாதை பணிகள் வரும் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரையில் (புதன், ஞாயிறுகிழமைகள் தவிர்த்து) நடக்கவுள்ளது. இதனால், அந்த மார்க்கத்தில் ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 11.35 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதுபோல், கும்மிடிப் பூண்டியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் எண்ணூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரலை வந்தடையும். மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மதியம் 12.10க்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் மிஞ்சூரில் 20 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்படும்.

நிரந்தரமாக பெட்டி இணைப்பு

ராமேஸ்வரம் திருப்பதி ராமேஸ்வரம் வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில்களில் (16780/16779) கூடுதலாக இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று வரும் 23-ம் தேதி முதல் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

கருத்துப் பேழை

7 mins ago

சுற்றுலா

44 mins ago

சினிமா

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்