பெண்ணின் கருவைக் கலைக்க முயற்சி: மாமனார், மாமியார், கணவருக்கு சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

மனைவியின் கருவை கட்டாயமாக கலைக்க முயன்ற குற்றத்துக்காக கணவர், மாமனார், மாமியார் ஆகி யோருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

சென்னை அருகேயுள்ள வேளச்சேரியைச் சேர்ந்தவர் ராஜமகாலிங்கம் (வயது 37). இவர் ஏற்கெனவே இரு பெண்களை மணந் துள்ளார். மூன்றாவதாக மணி மேகலை என்பவரை மணந்தார். அவர் 5 மாத கர்ப்பமாக இருந்த போது கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்துள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் கருவுற்றார். அந்த கருவையும் கலைக்க முயற் சித்தார். அதற்கு மணிமேகலையின் மாமியார் தனலட்சுமியும், மாமனார் பால்ராஜும் உடந்தையாக இருந் துள்ளனர்.

இதுகுறித்து கிண்டி மகளிர் காவல்நிலையத்தில் மணிமேகலை புகார் செய்தார். சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனா சதீஷ் இவ்வழக்கை நேற்று விசாரித்து, மனைவியின் கருவைக் கலைக்க முயன்ற குற்றத்துக்காக கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும், மாமனார், மாமியார் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

43 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்