ஸ்ரீரங்கத்தில் வெளியூர் ஆட்கள் குவிப்பு: அதிமுக, திமுக மீது தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கத்தில் வெளியூர் ஆட் களை குவிக்கும் பணிகளில் அதிமுக மற்றும் திமுகவினர் ஈடுபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்லில் போட்டியிடும் அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகின்றன.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வீரேஸ்வரம் பகுதியில் பாஜக வேட்பாளர் பிரச்சாரம் மேற் கொண்டபோது, பாஜக திருச்சி மாவட்டத் தலைவர் பார்த்திபன் மீது அதிமுகவினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை அங்கிருந்த காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அமைதியான முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்பதை அதிமுக விரும்பவில்லை.

மேலும் அதிமுக, திமுக கட்சிகள் வெளியூர்களிலிருந்து ஏராளமானவர்களை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அனுமதியின்றி ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் வலம் வருகின்றன. இதன் மூலம் ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

இடைத்தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமானால், அனுமதியின்றி தங்கியிருக்கும் வெளியூர் ஆட்களை வெளி யேற்றவும், உரிய அனுமதியின்றி தொகுதிக்குள் வலம் வரும் வாகனங்களை முடக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்