அந்நிய முதலீட்டைக் கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் சென்னையில் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதைக் கண்டித்து 16 தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய அரசின் நேரடி அந் நிய முதலீடு, தனியார் மயம், புதிய ஓய்வூதிய திட்டம் போன்ற வற்றைக் கண்டித்து ரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலை யில், சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்தில் 16 தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப்பட்டது.

இதில் டி.ஆர்.இ.யு. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதி களும் மத்திய அரசைக் கண்டித்து பேசினர். தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காதபட்சத்தில் அடுத்தகட்டமாக ஏப்ரல் 28 ம் தேதி டெல்லியை நோக்கி பேரணி மற்றும் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு அனைத்து தொழிற்சங்க கூட் டமைப்பு சார்பாக நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்