மதமாற்றத்துக்கு எதிராக தமிழகத்திலும் சட்டம் தேவை: விஎச்பி தலைவர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மத்தியப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் மதமாற்றத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா வலியுறுத்தினார்.

திருச்சியில் இருந்து திருவனந்த புரம் செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்து மதத்தை பலப்படுத்த வேண்டும். வணிகம், விவசாயம் போன்றவற்றில் முன்னிலையில் இருந்தோம். பாதுகாப்பாகவும் இருந்தோம். இன்று நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம்.

இந்து சமுதாயத்தை நாம் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மதமாற்றத்தை அனுமதிக்காது. மதமாற்றம் என்பது சட்டத்துக்கு எதிரானது.

வேணுகோபால் கமிட்டி அறிக்கையில் தமிழகத்தில் மதமாற்றம் நடப்பதாகத் தெரிவித்துள்ளது. எனவே மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் மதமாற்றத்துக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 secs ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்