கடலில் மூழ்கி 3 பேர் பலி: 23 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு!

By செய்திப்பிரிவு

சென்னை புரசைவாக்கம் அருகே கெல்லீஸ் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (17). நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்த அவர், நண்பர் களுடன் கடலில் இறங்கி விளை யாடினர். அப்போது, திடீரென வந்த பெரிய அலை விக்னேஷை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

திருப்பூரை சேர்ந்தவர் நவீன் (21). சென்னை நீலாங்கரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தனது நண் பர்களுடன் நேற்று முன்தினம் மாலை பாலவாக்கம் பகுதியில் கடலுக்குள் இறங்கி விளையாடி னார். அப்போது, நவீன் அலையில் சிக்கிய நவீன், கரை சேரவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை விக்னேஷின் சடலம் காந்தி சிலை அருகிலும், நவீனின் சடலம் பாலவாக்கம் கடற்கரை அருகிலும் கரை ஒதுங்கின.

இதேபோல, பெசன்ட் நகர் கடற்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது. அவர் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

கடந்த பிப். 1-ம் தேதி எண்ணூர் கடலில் சிலம்பரசன் என்ற 5-ம் வகுப்பு மாணவரும், 8-ம் தேதி பெசன்ட் நகர் கடலில் நாவலூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சூர்யா, சுசீந்திரன், பிரதீப் ஆகிய 3 பேரும், மெரினா கடலில் கார்த்திக் என்ற கல்லூரி மாணவரும், 15-ம் தேதி மயிலாப்பூரைச் சேர்ந்த நிராஜ் என்ற 10-ம் வகுப்பு மாணவரும், நேற்று முன்தினம் நவீன், விக்னேஷ் மற்றும் ஒரு பெண் என, கடந்த 23 நாட்களில் 11 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

45 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்