ராணிப்பேட்டையில் 2,900 டன் தோல் கழிவு அகற்றம்

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கழிவுத் தொட்டி, கடந்த 31-ம் தேதி நள்ளிரவு உடைந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். உடைந்த தொட்டியில் இருந்து வெளியேறிய அபாயகரமான தோல் கழிவுகளை அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்றது.

இதுவரை சுமார் 2,900 டன் கழிவு அகற்றப் பட்டுள்ளது. அதே போல, உடைந்த தொட்டிக்கு அருகில் இருந்த மற்றொரு சிறிய தொட்டியில் தேக்கி வைத்திருந்த சுமார் 1,200 டன் கழிவை, கும்மிடிப்பூண்டியில் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத் துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சண்முகம் கூறும்போது, வியாழக் கிழமைக்குள் கழிவை அகற்றும் பணி அனைத்தும் முடிந்துவிடும். தற்போது அகற்றப்படும் கழிவில் அதிகளவு தண்ணீர் இருப்பதால், வெயிலில் காய்ந்து கெட்டியான பிறகு கும்மிடிபூண்டிக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்