பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு டாமி புளூ மாத்திரை விநியோகம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

பன்றிக் காய்ச்சலை தடுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு டாமி புளூ மாத்திரைகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 13 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 775 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ள னர். அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானாவில் இருந்து தமிழகத்துக்கு பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 225-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமை நேற்று தொடங்கி வைத்த சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தனியார் மருத்துவமனை களுக்கும் டாமி புளு மாத்திரைகள் வழங்கப் படும் என தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பன்றிக் காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் டாமி புளு மாத்திரை வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கும் டாமி புளூ மாத்திரைகள் வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

38 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்