பாலியல் வன்முறை வழக்குகளில் உரிய நெறிமுறைகளை காவல்துறை கடைப்பிடிப்பதில்லை: பிருந்தா காரத் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பாலியல் வன்முறை வழக்குகளில் தமிழ்நாடு காவல்துறை நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் அசோக் குமாருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறனாளி சிறுமி மீது பாலியல் வன்முறை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை காவல்துறையினர் மீறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனவரி மாதம் உங்களை சந்தித்திருந்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த இரண்டாவது மருத்துவ பரிசோதனையின் முடிவு பிப்ரவரி 13-ம் தேதி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பாலியல் வன்முறை நடந்து ஒரு வாரம் கழித்தே முதல் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்பே இந்த சோதனை நடந்திருக்க வேண்டும். மேலும் இரண்டாவது மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் காவல்துறையி னர் அபத்தமான கேள்விகளை கேட்டுள்ளனர்

தமிழ்நாடு காவல்துறை பாலியல் வன்முறை வழக்கு களில் நெறிமுறைகளை பின்பற்று வதில்லை என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது. இதற்கு நீங்கள் உட்பட உயர் அதிகாரிகள் பொறுப்பு. எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், முதல் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து பேசவுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

தமிழகம்

2 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

36 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்