அஞ்சல் அட்டையில் ராகிங் புகார்: விழுப்புரம் காவல்துறை தகவல்

By செய்திப்பிரிவு

பள்ளி, கல்லூரிகளில் ராகிங் கொடுமைக்கு ஆளாகும் மாணவிகள் அஞ்சல் அட்டை மூலம் புகார்கள் அனுப்பலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொந்தரவு மற்றும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் முயற்சியாக, பள்ளி மாணவிகளுக்கு புகார் அஞ்சல் அட்டைகளை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

''பள்ளி , கல்லூரிகளில் ராகிங் கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிப்பதில்லை.

எனவே, பாதிக்கப்படும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பலாம். புகார் அனுப்புபவரின் பெயர், முகவரி குறிப்பிடத் தேவையில்லை .

அஞ்சல் அட்டையில் வரும் புகார்களைக் கண்காணிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அஞ்சல் அட்டை கிடைத்ததும் அதில் குறிப்பிடப்படும் தகவல் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று விக்ரமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்