‘வணக்கத்துக்குரிய’ வார்த்தை வேண்டாம்: மேயர், துணை மேயர்களுக்கு அரசு கண்டிப்பு - ‘மாண்புமிகு’ என்ற அடைமொழி போதும் என சுற்றறிக்கை

By செய்திப்பிரிவு

மேயர், துணை மேயரை மாண்புமிகு என்று மட்டுமே அழைக்க வேண்டும். பெயர்ப் பலகைகளிலும் வணக்கத்துக்குரிய என்ற வார்த்தையைத் தவிர்க்குமாறு, மாநகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் என 12 மாநகராட்சிகளில், மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் ‘வணக்கத் துக்குரிய’ என்ற அடைமொழி யுடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடந்த டிசம்பர் 10-ம் தேதி அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி, இனி மேயர்கள் மற்றும் துணை மேயர்களை ‘மாண்புமிகு’ என்ற அடைமொழியுடன் அழைத்தால் போதும் என்று குறிப்பிடப்பட்டது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் பனீந்திர ரெட்டி கடந்த 10.12.2014-ல் பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

கடந்த 14.10.96-ல் பிறப்பிக்கப் பட்ட அரசாணைப்படி, மாநகராட்சி மேயரை ‘மாண்புமிகு மேயர்’ அல்லது ‘மாண்புமிகு மன்றத் தலைவர்’ அல்லது ‘மன்றத் தலைவி’ என்று அழைக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் 20.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில், ‘மாண்புமிகு மேயர்’ என்று அழைக்கும் முறை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அவர்களை ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்று அழைக்க ஆணையிடப்பட்டது.

இந்நிலையில், ‘வணக்கத்துக் குரிய மேயர்’ என்று அழைக்கும் நடைமுறைக்குப் பதில், ‘மாண்பு மிகு மேயர்’ என்று அழைக்க வேண்டும் என அரசு கருதுகிறது. எனவே, இனி மேயர்களை ‘மாண்புமிகு’ என்ற அடைமொழி யுடன் அழைத்தால் போதும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த அரசாணை போடப்பட்ட பின்பும், சில மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் மேயரை ‘வணக்கத்துக்குரிய’ என்று அழைத் தும், தகவல் பலகைகளில் மேயர் பெயருடன் ‘வணக்கத்துக்குரிய’ என்ற அடைமொழியையும் பயன் படுத்தியதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், புதிய அரசாணையின் நகல் அனைத்து மாநகராட்சிகளுக்கும் அனுப்பப் பட்டு, இனி மன்றக் கூட்டங்களில் ‘மாண்புமிகு’ என்பதையே பயன் படுத்த வேண்டும்.

‘வணக்கத்துக்குரிய’ என்ற வார்த்தை தேவையில்லை என்று அரசின் சார்பில் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

வணிகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்