ரூ.5,000-க்கு மேல் மின் கட்டணம் காசோலையாக செலுத்த வேண்டும்: புதிய கட்டுப்பாடு வருகிறது

By செய்திப்பிரிவு

மின்சார பயன்பாட்டுக்கான கட்ட ணத்தில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் புதிய நிபந்தனைகள் விதித்து, விநியோக விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்து வரும் 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரி விக்க பொதுமக்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி, கடந்த டிசம்பர் 12-ம் தேதி முதல் மின்சார பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார விநியோக விதிகளில் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய நிபந்தனைகளை அமல்படுத்த உள்ளது.

இதுகுறித்து ஆணைய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின்சார விநியோக விதிகள் 2004-ல், 15-வது ஒழுங்குமுறையின் பிரிவு மூன்றில் திருத்தம் ஒன்று கொண்டு வரப்படுகிறது.

இதன்படி, ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்த வரும் தாழ்வழுத்த மின் நுகர்வோர், காசோலை அல்லது வரைவோலை கொண்டு வர பரிந்துரைக்கப்படும்.

அதேநேரம் சூழ்நிலைக்கேற்ப அவர்களிடம் ரொக்கப் பணமாக கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, அடுத்தமுறை வரைவோலை அல்லது காசோலை கொண்டு வருமாறு அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

இதேபோல், மின் விநியோக ஒழுங்குமுறை விதிகள் 15, பிரிவு 4-லும் சில திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

தாழ்வழுத்த நுகர்வோரின் காசோலை பணமின்றி வங்கியிலிருந்து திரும்பி விட்டது என்றால், அவரிடம் மீண்டும் ரொக்கமாகவோ, மணியார் டராகவோ அல்லது வரைவோலை யாகவோ மட்டுமே பெற வேண்டும். பின்னர் அவர் சரியாகப் பணம் செலுத்துகிறாரா என்று கடைசி 3 தொடர் கட்டண முறைகளைப் பார்த்து, மீண்டும் அவருக்கு காசோலை வசதியைத் தருவது குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர் முடிவெடுக்க வேண்டும். இந்த முறையானது உயரழுத்த நுகர்வோருக்கும் பொருந்தும்.

ஒருவேளை பணமில்லை என்பதைத் தவிர எழுத்துப் பிழை, கையொப்பம் ஒத்துப்போகாதது உள்ளிட்ட காரணத்தால், வங்கி காசோலை திரும்பினால், அவரிடம் தொடர்ந்து 4 கட்டண முறைகளுக்கு வங்கி காசோலை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் அனைத்து வகை நுகர்வோரும் ஏற்கெனவே ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்ட சேவைக் கட்டணங்களை வழக்கம் போல் செலுத்த வேண்டும்.

இவ்வாறு திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்தத் திருத்தங்கள் மீது நுகர்வோர், தொழிற்துறையினர் மற்றும் மின் பயன்பாடு தொடர்பானோருக்கு ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 31-ம் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

17 mins ago

சுற்றுச்சூழல்

27 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

22 mins ago

விளையாட்டு

43 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்