வேதாந்தா, அதானி, நிர்மா திட்டங்களுக்கு பிரதமர் அலுவலகமே முடிவெடுத்தது - நான் பலிகடா ஆக்கப்பட்டேன்: சோனியாவுக்கு ஜெயந்தி நடராஜன் கடிதம்

By செய்திப்பிரிவு

வேதாந்தா, அதானி, நிர்மா நிறுவன திட்டங்கள் குறித்து பிரதமர் அலுவலக ஆலோசனைப்படியே முடிவெடுக்கப்பட்டதாகவும், தன்னை பலிகடா ஆக்கிவிட்டதாக வும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 2014- ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி சோனி யாவுக்கு அவர் எழுதிய கடிதம் வருமாறு:

கடந்த 1984-ம் ஆண்டு முதல் காங்கிரஸில் உள்ள நான் நான்கு முறை எம்.பி.,யாக இருந்துள் ளேன். இத்தனை ஆண்டு சேவையில் என்ன தவறு செய்தேன் எனத் தெரியவில்லை. எந்தக் காரணமு மின்றி டிசம்பர் 20, 2013-ல் நான் அமைச்சர் பதவியிலிருந்து விலக உத்தரவிடப்பட்டது. இதற்கான காரணத்தை நான் அறியவோ அல்லது விளக்கம் தரவோ அனுமதிக்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக ராகுல்காந்தி அலுவலகத்திலிருந்து பல கடிதங்கள் எனக்கு வந்தன. ஒருமுறை ஒடிஷாவின் நியமகிரி மலைக்கிராமங்களுக்குச் சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள பழங்குடி யினரிடம், ‘‘நான் டெல்லியில் உங்கள் சார்பிலான சிப்பாய். உங்கள் நலன் பேணப் படும். மிகப்பெரிய கனிம நிறுவனமான வேதாந்தா திட்டம் இங்கு அனுமதிக்கப்படாது’’ என்றார். ஆனால், மத்திய அமைச்சரவை யிலுள்ள பல அமைச்சர்கள் என்னை வற்புறுத்தியும் நான் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தரவில்லை. இதனால் 30 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக விமர் சித்தனர். ஆனால் என் முடிவை உச்சநீதிமன்றம் வரவேற்றது.

இதேபோல், அதானி குழும திட்டத்துக்கும் அமைச்சரவையின் உள்ளும், வெளியிலும் எனக்கு அழுத்தம் வந்தது. சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பின் சார்பில் தீபக் பபாரியா மற்றும் உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பதாக ராகுல் காந்தி தெரிவித்து, என்னை பபாரியாவுடன் பேசி முடிவெடுக்கு மாறு கூறினார். அதானி நிறுவனத் துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையும் அவர் பாராட்டினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் தாரி தேவி கோவில் தொடர்பான ஜி.வி.கே., மின் திட்டம், மஹாராஷ் டிராவில் லவாசா திட்டம், குஜராத்தில் நிர்மா சிமென்ட் திட்டம் போன்ற பலவற்றில் ராகுல் காந்தியிடமிருந்து கட்டளைகள் வந்தன. மேலும் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர் புலோக் சாட்டர்ஜி என் அலுவலகத்தில் எப்போதும் தொடர்பில் இருந்தார். அமைச்சரவை முடிவுகள் பிரதமர் அலுவலக முடிவுகளின்படி எடுக்கப் பட்ட நிலையில் என்னை விமர்சனம் செய்வது என்ன நியாயம்?

எனது ராஜினாமாவுக்குப் பின் கேரள ஊடகங்களில் வந்த செய்தியில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை, நான் நீதிமன்ற உத்தரவுப்படி அரசாணையாக வெளியிட ஒப்புதல் அளித்தேன். இந்த அறிக்கையை பிடிக்காத சிலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்டு, அவர்கள் பிரதமர் மற்றும் உங்களிடம் எனக்கு எதிரான புகார் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

எனக்குப் பின் வீரப்பமொய்லி பதவியேற்றபோது, அதானி குழுமம் தொடர்பான கோப்பை சட்ட பரிசீலனைக்காக நான் கேட்டேன். அந்த கோப்பு தொலைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கோப்பு அமைச்சர் அலுவலக கழிவறையில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தக் கோப்பை சில அதிகாரிகள் எனக்கு அனுப்பாமல் வேண்டுமென்றே மறைத்துள்ளது தெரிகிறது.

நான் அவமானப்படுத்தப் பட்டதால் உடல், மனதளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளேன். என் குடும்ப கவுரவம், பிள்ளைகளின் எதிர்காலத்தை நான் பாதுகாக்க வேண்டிய நிலையிலுள்ளேன்.

வாசன் கட்சி தொடங்கியவுடன் என்னை மேலிடத்திலிருந்து அழைத்துப் பேசியுள்ளீர்கள். இல்லாவிட்டால் அப்படியே விட்டிருப்பீர்கள். ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் பொருளா தார நலிவுக்கு என்னை பலிகடா ஆக்கிவிட்டீர்கள். என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது குறித்து தங்களிடம் விளக்கி யுள்ளேன். நீங்கள் என் நிலையை அறிந்தால் மிக்க நன்றியுள்ளவராக இருப்பேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

42 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்