இ-போஸ்ட் வாழ்த்து அஞ்சல் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு வட்டார அஞ்சல் துறை தலைவர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

அஞ்சல்துறையை நவீனப்படுத்துவதற்காக இ-போஸ்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை இந்தியாவில் 1,55,000 தபால் நிலையங்களில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிடித்தவர்களுக்கு மென் நகல்களின் மூலம் வாழ்த்துகளை அனுப்பினால், குறிப்பிட்ட அந்த நபரின் முகவரிக்கு அவை வன் நகலாக அனுப்பப்படும். இதற்கு ஒரு பக்கத்துக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இ-போஸ்ட்டில் புதிய சேவையை துவங்கியுள்ளோம். இதன்படி ஜனவரி 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இ-போஸ்ட் மூலம் பொங்கல் வாழ்த்து அனுப்புபவர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் அனுப்புவோருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 10 பேருக்கு இந்த பரிசுகள் வழங்கப்படும்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

28 mins ago

உலகம்

26 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்