பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசானப் பருவ சாகுபடிக்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டம், மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய், திருவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய் ஆகியவற்றின் கீழ் உள்ள மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசானப் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு

நீர்த்தேக்கங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டம், மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய், திருவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய் ஆகியவற்றின் கீழ் உள்ள மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசானப் பருவ சாகுபடிக்காக 2.12.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.

இதனால், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களிலுள்ள 32,601 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்