செயல்படாத முதல்வர்... செயல்படாத சட்டப்பேரவை! - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் முதல்வரும் சட்டப் பேரவையும் செயல்படாத நிலை யில் உள்ளன. எதிர்க்கட்சிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதுதொடர்பாக நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியதாவது:

தமிழக அரசியலை பொறுத்த வரை தற்போது செயல்படாத சட்டமன்றம், செயல்படாத முதல்வர், செயல்பட முடி யாத எதிர்க்கட்சிகள்தான் உள்ளன. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆரோக்கிய மான விவாதம் நடக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய இடவசதி செய்துதர வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அது நிறைவேறவில்லை. பேரவைக்கு யாரும் வரக்கூடாது என்று அரசு நினைப்பது கவலை அளிக்கிறது.

சட்டப்பேரவையை நீண்ட நாட்கள் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 3 நாட்கள் மட்டுமே இந்த கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மின்சார ஊழல், முட்டை ஊழல், பருப்பு ஊழல், ரோடு ஊழல் என பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அதுபற்றி யாரும் விவாதிக்கக்கூடாது என்பதால்தான் சட்டமன்றத்தை சுருக்கியுள்ளார்களோ என்று மக்கள் மனதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மக்களின் சந்தேகத்தை தீர்த்துவைப்பது அரசின் கடமை. எதிர்க்கட்சிகள் ஒரே கருத்தை எழுப்பும்போது, அதை தீர்த்துவைக்க வேண்டியது அரசின் கடமை.

திருநெல்வேலியில் குழந்தையை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது, மருத்துவர்கள் வெளியே ரத்தம் வாங்கிவரச் சொல்லியுள்ளனர். பொது மக்களை துன்பப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளை மேம் படுத்தி ரத்த சேகரிப்பு வசதிகள் செய்துதரப்பட வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

1 hour ago

இந்தியா

39 mins ago

வர்த்தக உலகம்

43 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்