இலங்கை தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கை அதிபருக்கான தேர்தலில் ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேன இருவரில் யாரை ஆதரிப்பது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் இலங்கை எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அனைத்து இந்து இயக்க தலைவர்களின் கூட்டம் ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சேர்ந்த இலங்கை மட்டக்களப்பு எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரனும் கலந்து கொண்டார்.

சீனிதம்பி யோகேஸ்வரன் ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

''இலங்கை அதிபருக்கான பொதுத் தேர்தல் ஜனவரி மாதம் 8 தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி ராஜபக்சேவும், மைத்திரிபால சிரிசேனவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் சிங்களர்கள். இவர்களினல் யாரை ஆதரிப்பது என தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ராஜபக்சே மைத்திரிபால சிரிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக செய்திகளை பரப்பி அவர் சிங்கள மக்களிடம் ஆதரவை திரட்டி வருகிறார்.

இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் கழிந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். . சம்பூர் பகுதியை சார்ந்த மக்களுக்குச் சொந்தமான 9800 ஏக்கர்க நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இன்னும் உள்ளன. இன்னும் சம்பூர் பகுதி மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் குடியேறவில்லை. இந்தப் பகுதியில் இந்திய அரசு அனல் மின்திட்டம் துவக்க உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அல்லது இதனை சீன அரசிடம் ஒப்படைக்கும் அபாயமும் உள்ளது.

மட்டகளப்பில் இந்திய அரசு கட்டித்தரும் 50,000 வீடுகளில் 36,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவை முழுவதுமாக தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வழுக்கட்டாயமாக சிங்களர்களை குடியேற்றி வருகிறனர். மேலும் இலங்கையில் இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு பௌத்த மடாலயங்கள் எழுப்பப்படுகிறன.

இலங்கையில் தமிழர்களுக்காக தமிழக மக்கள் மட்டும் குரல் கொடுத்தால் போதாது. அது இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து எழும் குரலாக இருக்க வேண்டும், என்றார் இலங்கை எம்.பி சீனிதம்பி யோகேஸ்வரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

54 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்