பாரதியின் கவிதைகள் உத்வேகத்தை தரும்: முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் புகழாரம்

By செய்திப்பிரிவு

பாரதியின் கவிதை வரிகள் நமக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் என்று காவல்துறை முன்னாள் தலைவர்(டி.ஜி.பி.) ஆர்.நட்ராஜ் கூறியுள்ளார்.

சென்னை வானவில் பண் பாட்டு மையம் சார்பில் 21-வது ஆண்டாக கொண்டாடப்படும் பாரதியின் 133-வது பிறந்த நாள், ‘பாரதி விழா’வாக 4 நாட்கள் நடைபெறுகின்றது. முதல் நாள் நிகழ்வாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முகப்பில் மகாகவி பாரதியின் உருவச் சிலைக்கு சால்வை, பொற்பை வழங்கி பாரதியின் ஜதி பல்லக்கை முன்னாள் டி.ஜி.பி., ஆர்.நட்ராஜ் தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, “பாரதி யின் கவிதைகளை வாசித்தால் நமக்குள் ஒரு உத்வேகத்தை கொடுக்கும். மனம் தெளிந்து புதுசக்தி கிடைக்கும்.

நான் அரசுத் தேர்வாணை யத்தில் தலைவராக இருந்த போது, புதிதாய் அரசுப் பணியில் சேருபவர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் அவர்களுக்கு பாரதியின் கவிதை நூலைக் கொடுத்தேன். ‘ரெளத்திரம் பழகு’ என்று பாரதி சொன்னது, வெறும் கோபப்படுவதை அல்ல. சமூக அநீதிகளுக்கெதிராக நாம் கோபங்கொள்ள வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தி யுள்ளார்.

மானிடர் மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்குமான உரிமைக்குக் குரல் கொடுத்தவன் பாரதி. மேற்கு வங்காளத்தில் ‘ரவீந்திர கீதம்’ என்று தாகூரின் கவிதைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதைப்போல், தமிழ கத்திலும் ‘பாரதி கீதம்’ என்று அவரது கவிதைகளைத் தமிழ கத்தின் தெருவெங்கும், வீடுகள் தோறும் கொண்டு செல்வதே அந்த மானுடம் சிறக்க பாடிய மகாகவிஞனுக்கு நாம் செய்கிற மிகப் பெரிய அஞ்சலியாக இருக்கும்” என்றார்.

விழாவில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாடகி வாணி ஜெயராம், மூத்த தமிழறிஞர் டி.என்.ராமச்சந்திரன், வழக்கறிஞர் ரவி, முனைவர் வ.வே.சு. ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

55 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்