‘தமிழ் இசை என்பது தனிமனித ஒழுக்கமே’

By செய்திப்பிரிவு

ஆதியிசையாய் இருக்கிற நம் தமிழ் இசை என்பது தனிமனிதனின் ஒழுக்கமேயாகும் என்று சென்னையில் நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 72-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து பேசினார்.

சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் சார்பாக, சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நடைபெற்ற விழா வில் உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சீர்காழி ஜி.சிவ சிதம்பரத்துக்கு ‘இசைப் பேரறிஞர்’ பட்டத்தையும், திருவிடைமருதூர் சு.சம்பந்த தேசிகருக்கு ‘பண் இசைப் பேரறிஞர்’ பட்டத்தையும், டாக்டர் இராமநாதன் செட்டியாருக்கு பாராட் டும் பரிசினையும் அவர் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர், ‘தமிழ் மொழி தோன்றிய நாளிலிருந்தே நமது தமிழ் இசையும் இருக்கிறது. தமிழ் இசையை ஆதியிசை என்று அறிஞர் பெருமக்கள் பலரும் பாராட்டுகின்ற னர். நாம் நமது தமிழிசையின் பெரு மையை அறியாதவர்களாய் இருக்கி றோம். தமிழ்நாட்டில் தமிழிசை கச்சேரி களை நடத்திட இன்னமும் பல சபாக் கள் முன்வருவதில்லை, அங்கு தமி ழிசைப் பாட அனுமதியும் இல்லை என்பது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.

நம்மிடையே சிலருக்கு இன்னமும் கூட அடிமைப்புத்தி இருக்கிறது. எதற் கெடுத்தாலும் மேலைநாட்டவர் கூறிய வற்றை சுட்டிக்காட்டி தன்னைப் புத்தி சாலியாக காட்டிக் கொள்கின்றனர். எனது தீர்ப்புகளில் வள்ளுவர், ஒளவை யார், நாலடியார் போன்றவற்றிலிருந் துதான் நான் மேற்கோள்களைக் காட்டி வருகிறேன்” என்றார். விழாவில், முன் னாள் நீதிபதிகள் பு.ரா.கோகுல கிருஷ்ணன், ஏ.ஆர்.லெட்சுமணன், ச.மோகன், சாமுத்துரை, ஏ.சி.முத்தையா, எம்.ஏ.எம்.ராமசாமி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

28 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்