போடியில் தேமுதிகவினர் மீது தாக்குதல்: அதிமுகவினருக்கு விஜயகாந்த் கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என பலமுறை கேள்வி எழுப்பினேன், அதற்கு இப்போது தான் பதில் கிடைத்துள்ளது, முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொகுதியிலேயே, சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடியில் உள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து தேமுதிக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுக நகர செயலாளர் பால முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் தேமுதிகவினர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிமுகவினரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ரேஷன் கடைகளில் முறை கேடுகள்

நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தும் முதல்வர் கண்டும் காணாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?

சட்டப்பேரவையில்தான் எதிர்க் கட்சிகளை பேசவிடுவதில்லை. மக்கள் மன்றத்திலாவது இதைச் சொல்லலாம் என ஆர்ப்பாட்டம் நடத்தினால் அங்கேயும் வன் முறையை கட்டவிழ்த்து விடுவதா? எனவே, வன்முறையில் ஈடுபட்ட ஆளுங்கட்சியினரை காவல்துறை உடனடியாக கைது செய்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

இதுபோன்ற அராஜக செயல் களில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டால், தேமுதிகவினர் இனியும் பொறுமை காப்பார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம். இருக்கும் ஒன்றரை ஆண்டு காலமாவது உங்களை, ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு நல்லது செய்யப் பாருங்கள். இல்லையென்றால் ‘ஆட்சி மாறும், காட்சிகளும் மாறும்’.

இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

உலகம்

4 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்