கடலில் விழுந்த சோதனை விண்கலம் எண்ணூர் வந்தடைந்தது: திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது

By செய்திப்பிரிவு

ஸ்ரீஹரிகோட்டாவில் கடந்த 18-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு கடலில் விழுந்த சோதனை விண்கலம் பத்திரமாக எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

வளர்ந்த நாடுகளைப் போல இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக ரூ.155 கோடி செலவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வரலாற்றில் முதல் முறையாக 360 டன் எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டது. அதில் 3.7 டன் எடை கொண்ட விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சோதனை விண்கலமும் தயாரித்து வைக்கப்பட்டது. இந்த ராக்கெட் டிசம்பர் 18-ம் தேதி சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி, மனிதன் விண்ணுக்கு பயணிக்கும் சோதனை விண்கலம் அந்தமான் அருகே, விண்ணில் ஏவப்பட்ட 21-வது நிமிடத்தில் கடலில் விழுந்தது.

அதை அப்பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டு, எண்ணூர் துறைமுகம் நோக்கி கப்பலில் கொண்டு வந்தனர். இந்த விண்கலம் நேற்று எண்ணூர் துறைமுகத்தை அடைந்தது. அதை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு பெற் றுக்கொண்டு, திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் தாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

அதிகாரி விளக்கம்

இது குறித்து இஸ்ரோ நிறுவன அதிகாரி ஒருவர், ‘‘இந்த விண்கலத் தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். பின்னர் இதில் கிடைக்கும் படிப்பினை யைக் கொண்டு, விண்கலத்தை உரு வாக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவார்கள்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

25 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்