அஞ்சலகங்களுக்கு இடம் தராத ஐடி நிறுவனங்கள்: மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தபால் நிலையங்களை அமைப்பதற்கு ஐடி நிறுவனங்கள் ஒத்துழைப்பு தராததால் அப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான அளவில் குடியிருப்புகள் உருவாகியுள்ளன. அந்தப் பகுதியில் ஏராளமான ஐடி மற்றும் பிற கார்ப்பரேட் நிறுவனங் கள் உள்ளன. ஆனால் அந்த பகுதிகளில் தபால் நிலைய வசதி சரியாக இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் புகார்

இது தொடர்பாக உத்தண்டி பகுதியில் வசிக்கும் ரங்கராஜ் என்னும் தனியார் நிறுவன ஊழியர் கூறுகையில், “கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் தொகையும் கூடிவிட்டது. என்னதான் மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். போன்ற சேவைகள் இருந் தாலும். சில முக்கிய தகவல் பரி மாற்றங்களை அஞ்சல் வழியில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் குறைவான தபால் நிலையங்களே உள்ளன. இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை” என்றார்.

அதிகாரிகள் கருத்து

இது தொடர்பாக அஞ்சல்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், “கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தபால் நிலையங்களை அமைக்க வசதியான கட்டிடம் கிடைக்கவில்லை. எனினும் தாழம்பூரில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு புதிய அஞ்சலகத்தை திறந்தோம்.

இன்னும் சில அஞ்சல் நிலையங்களை தொடங்க ஐடி நிறுவனங் களிடம் இடம் கேட்டோம். ஆனால் அவர்கள் இடம் ஒதுக்கவில்லை. எனவே, மாற்று வழி குறித்து யோசித்து வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்