அத்திவரதர் நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றியுள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

அத்திவரதர் நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றியுள்ளார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் இவ்வாறு கூறினார்.

அவர் பேசும்போது, "வீட்டுக்குள் ஆத்திகவாதிகளாக இருப்பவர்கள் வெளியில் நாத்திகவாதிகளாக இருக்கின்றனர். கடவுள் இல்லை, இல்லை என்று பேசிக்கொண்டிருக்கும் திமுகவினர் இன்னொருபுறம் லெட்டர்பேடில் நான் அத்திவரதரை தரிசிக்க வருகிறேன் எங்களுக்கு பாஸ் கொடுங்கள் என காஞ்சிபுர்ம மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிக்கொடுத்து கேட்கின்றனர்.

நாத்திகர் என்று சொல்லி சிலர் இரட்டை வேடம் போடுகிறார்கள். கடவுள் இல்லை என்று அண்ணாவே கூறவில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் அவரே சொன்னார். அதனால், தெய்வ தரிசனம் செய்தால் கடவுள் நம்பிக்கையையும் ஒப்புக்கொள்ளுங்கள். அதற்கு எதுக்கு இரட்டை வேடம். அத்திவரதர் நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றியுள்ளார். இது நல்ல விஷயம்" என்றார்.

எழுவர் விடுதலை குறித்த கேள்விக்கு, "இந்தப் பிரச்சினை சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரை நிர்பந்திக்க முடியாது. ஆனால், தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும். ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

15 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்