பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்காது: எம்.பி. நவநீதகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளைப் பாதிக்காது என்று மாநிலங்களவை அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான விலை உயரும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 2.57 ரூபாய் உயர்ந்து ரூ.75.76 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 2.52 ரூபாய் அதிகரித்து ரூ.70.48 காசுகளாகவும் விற்பனையாகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளைப் பாதிக்காது என்று மாநிலங்களவை அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

''இந்த விலை உயர்வு ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே மத்திய அரசு கூடுதல் வரி விதித்துள்ளது. ஏழை மக்களும் நடுத்தர மக்களும் தினந்தோறும் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துவதில்லை.

ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். அதனால் வசதியானவர்களிடம் இருந்தே இந்த வரி வசூல் செய்யப்படுகிறது. ஏழைகளிடம் இருந்து இந்தத் தொகை வசூல் செய்யப்படவில்லை''.

இவ்வாறு நவநீதகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

க்ரைம்

18 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

42 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்