தபால்துறை தேர்வு மாநில மொழியில் நடக்காது: மத்திய தொலை தொடர்புத் துறை தகவல்

By செய்திப்பிரிவு

இந்திய தபால் துறையின்கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இந்த தபால் நிலை யங்களில் காலியாக உள்ள போஸ்ட்மேன், மெயில் கார்டு, உதவியாளர் உட்பட பணியிடங் கள் போட்டித்தேர்வு மூலம் நிரப் பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தபால்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வு முறையில் இப்போது புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. அதன்படி இதுவரை மாநில மொழிகளில் நடைபெற்று வந்த தபால்துறை முதன்மை பணிகளுக்கான முதல்தாள் எழுத் துத்தேர்வு இனி இந்தி, ஆங் கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை உதவி தலைமை இயக்குநர் சி.முத்து ராமன், அனைத்து தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தபால்துறையில் பணியிடங்களை நிரப்ப முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகளில் மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி முதன்மை பணியிடங்களை நிரப்பு வதற்கான முதல் தாள் தேர்வு இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும்.

பிற பணியிடங்களுக்கான 2-ம் தாள் தேர்வு ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய தேர்வு முறையை உடனே அமல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்