கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு: அமைச்சர் உதயகுமார்

By செய்திப்பிரிவு

கல்வித் தகுதி அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''தமிழகத்தில் எத்தனை கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன? அவற்றை நிரப்ப கிராம உதவியாளர்களையே கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?'' என்று கேள்விகள் எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''கிராம நிர்வாக அலுவலர்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

தற்போது காலியாக உள்ள பணியிடங்களில், ஓய்வுபெற்ற 1000 கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் வேலை அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்றார் உதயகுமார்.

கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராகப் பதவி அளிப்பது குறித்துப் பேசிய அமைச்சர் உதயகுமார், கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும்'' என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்