7 ஆயிரம் அடி உயரத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது போர் விமானத்தின் பாகம் கழன்று விழுந்தது: தீப்பிடித்த பெட்ரோல் டேங்க் வெடித்துச் சிதறியது

By செய்திப்பிரிவு

கோவை அருகே, தேஜஸ் போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விவசாய நிலத்தில் கழன்று விழுந்து நொறுங்கியது.

கோவை மாவட்டம் சூலூரில் இந்திய விமானப்படைத் தளம் உள்ளது. இங்கு போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் உள்ள ராணுவ விமானங்கள் பழுதானால் அவற்றை சரி செய்யும் தொழில் நுட்பப் பிரிவும் இங்கு இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை ‘தேஜஸ் எல்சிஏ’ எனப்படும் இலகு ரக போர் விமானத்தில் வீரர்கள் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். காலை 8.30 மணியளவில் தரையில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு தேஜஸ் விமானத்திலிருந்து 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் திடீரென கழன்று, இருகூர் அருகே அத்தப்ப கவுண்டன் புதூரில் உள்ள விவசாயி நந்தகுமாரின் தோட்டத் தில் தீப்பிடித்தபடி விழுந்தது.

இதன் உதிரிப்பாகங்கள் தோட்டம் முழுவதும் சிதறிக் கிடந் தன. பலத்த சத்தம் கேட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வை யிட்டனர். உதிரிப்பாகத்தை பார்த்த மக்கள் ஏதோ சிறிய ரக விமானம் வெடித்துவிட்டது என அதிர்ச்சிய டைந்து சூலூர் போலீஸாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து சூலூர் விமானப்படை அதிகாரிக ளும் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து சூலூர் விமானப் படைத் தள அதிகாரிகள் கூறியதாவது:

வீரர்களுக்கு காயமில்லை

போர் விமானத்தில் கூடுதலாக ஒரு பெட்ரோல் டேங்க் இணைக் கப்பட்டிருக்கும். அதன்படி, தேஜாஸ் விமானத்தில் கூடுத லாக 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் இணைக்கப்பட்டி ருந்தது. நேற்று பயிற்சியின்போது இந்த டேங்க்கில் தீப்பிடித்ததாக விமான ஓட்டிக்கு சிக்னல் கிடைத் துள்ளது. அவர் முன்னெச்சரிக் கையாக, ஆள் இல்லாத இடத்தில் அந்த பெட்ரோல் டேங்க்கை கழற்றி விட்டுள்ளார். அந்த டேங்க் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

பின்னர் அந்த விமானம் சூலூர் விமானப்படைத் தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது. வீரர் கள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

பயிர்கள் சேதம்

இதுகுறித்து நிலத்தின் உரிமை யாளர் நந்தகுமார் கூறும்போது, ‘‘தோட்டத்தில் தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளேன். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு ஏக்கரில் மேற்கண்ட பயிர்கள் சேத மடைந்துள்ளன.

10 அடி அகலத்தில் 3 அடி ஆழத் துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் சிதறியதில் மண் சேதமடைந்துள்ளது. இது தொடர் பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள் வந்து சர்வே செய்த பிறகு இழப்பீடு வழங்கப்படும் என கிராம நிர்வாக அலுவலரும், சூலூர் விமானப்படை தள அதிகாரிகளும் தெரிவித்தனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்