கொடைக்கானல் பகுதியில் பறந்த போர் விமானங்கள்: மலைக் கிராம மக்களிடையே பரபரப்பு

By செய்திப்பிரிவு

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் போர் விமானங்கள் அதிக இறைச்சலுடன் பறந்ததால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் விமானம் ஒன்று பறந்தது. இது போர் விமானம் போன்று தெரிவதாக அதைப் பார்த்த சிலர் தெரிவித்தனர். மேகக் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் போர் விமானம்தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் நேற்று காலை கேரள மாநில எல்லையில் உள்ள கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான கிளாவரை, கவுஞ்சி, மன்னவனூர் ஆகிய கிராமப்பகுதிக்கு மேலே கேரளப் பகுதியில் இருந்து அதிவேகத்துடனும், இறைச்சல் சத்தத்துடனும் நேற்று காலை 11 மணியளவில் அடுத்தடுத்து போர் விமானங்கள் தமிழக எல்லைக்குள் வந்தன. விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்ததால் மலைக்கி ராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் விமானங்கள் கேரள மாநில எல்லைக்குள் திரும்பிச்சென்றன.

கொடைக்கானல் மலைப் பகுதிக்கு போர் விமானங்கள் வந்து செல்வது குறித்த காரணங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. பயிற்சியில் ஈடுபட மலைப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றே யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்