பொறியியல் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: 89 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 456 இடங்களில் 86 ஆயிரத்து 355 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 89 ஆயிரத்து 101 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழ்நாட்டில் 528 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 456 இடங் கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இவை ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப் பித்தனர். கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பொது கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட படி கலந்தாய்வு நேற்றுடன் முடி வடைந்தது. இந்த கலந்தாய்வு மூலமாக 86 ஆயிரத்து 355 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த எண்ணிக்கையில் 45 ஆயிரத்து 296 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 456 இடங்களில் இன்னும் 89 ஆயிரத்து 101 இடங்கள் காலியாகவுள்ளன.

இதற்கிடையே, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 16-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆன் லைனில் பதிவுசெய்துகொள்ள லாம்.

இதைத்தொடர்ந்து, எஸ்சி (அருந்ததினர்) பிரிவில் காலியாகவுள்ள இடங்களை எஸ்சி பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வுக்கு 18-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ஜெ.இந்துமதி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்