அரசு இசைக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் திடீர் ஸ்டிரைக்: தகுதி குறைவானவர் முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை அரசு இசைக் கல்லூரியில் சீனியர் ஆசிரியர்களை புறக்கணித்துவிட்டு வேறு கல்லூரியைச் சேர்ந்த ஜூனியர் ஆசிரியரை முதல்வராக நியமித்திருப்பதை கண்டித்து ஆசிரியர்களும், மாணவர்களும் வியாழக்கிழமை திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது அரசு இசைக் கல்லூரி. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிவரும் இக்கல்லூரியில் வாய்பாட்டு, மிருதங்கம், வயலின், கடம், கஞ்சிரா உள்ளிட்ட இசைப் பயிற்சிகளில் பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இசை படிப்புகள் படிக்கின்றனர். 32 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இக்கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த விசாகன் மாறுதலாகிச் சென்ற நிலையில், கடந்த 2 மாதங்களாக கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் பெருமாள், முதல்வர் பொறுப்பை கவனித்து வந்தார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் ஸ்டிரைக்

இந்நிலையில், மதுரை அரசு இசைக் கல்லூரி ஆசிரியர் விக்ரமன், இக்கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் திடீரென பொறுப்பேற்றார். அவரிடம் இணை இயக்குநர் பெருமாள், முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார்.

சென்னை இசை கல்லூரியில் சீனியர் ஆசிரியர்கள் ஏராளமானோர் இருக்கும்போது, ஜூனியர் ஆசிரியர் ஒருவர் முதல்வராக நியமிக்கப் பட்டிருப்பதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மாலை 4 மணிய ளவில் ஆசிரியர்களும் மாணவ- மாணவிகளும் திடீரென கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஜூனியர் ஆசிரியரை முதல்வராக நியமித்த உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் கூட்டாக தெரிவித்தனர்.

சீனியர் ஆசிரியர்கள் ஏராளமானோர் இருக்கும்போது, ஜூனியர் ஆசிரியர் ஒருவர் முதல்வராக நியமிக்கப் பட்டிருப்பதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

5 mins ago

சினிமா

3 mins ago

தமிழகம்

25 mins ago

க்ரைம்

41 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்