ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்

By செய்திப்பிரிவு

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரக்கோணம் - திருத்தணி இடையே வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நாட்களில் அரக்கோணத்தில் இருந்து காலை 10.30, பகல் 1.05, பிற்பகல் 2.50 ஆகிய நேரங்களில் திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் திருத்தணியில் இருந்து காலை 11, பகல் 1.30, பிற்பகல் 3.20 ஆகிய நேரங்களில் அரக்கோணத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ரயில் சேவை மாற்றம் காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே உள்ள காவனூர் யார்டில் பராமரிப்புப் பணிகள் நடக்கவிருப்பதால் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (22637) ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக சென்றடையும். கேஎஸ்ஆர் பெங்களூரூ - அரக்கோணம் பாசஞ்சர் ரயில், வரும் 13-ம் தேதி 15 நிமிடமும், 19-ம் தேதி 1.20 மணி நேரமும் தாமதமாக அரக்கோணம் சென்றடையும்.

கேஎஸ்ஆர் பெங்களூரூ - சென்னை சென்ட்ரல் டபுள் டெக்கர் விரைவு ரயில், 20-ம் தேதி 30 நிமிடமும் 21-ம் தேதி 15 நிமிடமும் தாமதமாக சென்னை வந்தடையும். கேஎஸ்ஆர் பெங்களூரூ - அரக்கோணம் பாசஞ்சர் ரயில், 20-ம் தேதி 3 மணி நேரமும், 21-ம் தேதி 2 மணி நேரமும் தாமதமாக அரக்கோணம் சென்றடையும். இத்தகவல்களை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

8 mins ago

சினிமா

11 mins ago

வலைஞர் பக்கம்

15 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

25 mins ago

இந்தியா

33 mins ago

க்ரைம்

30 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்