போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு? - அடுத்த வார பேச்சில் முடிவு

By செய்திப்பிரிவு

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு எவ்வளவு என்பது குறித்து அடுத்த வாரம் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிவரும் மொத்தம் 1.43 லட்சம் ஊழியர் களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்கள், புதிய ஊதிய ஒப்பந்தம் அமைக்க வேண்டுமெனக் கோரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் புதிய ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அரசு போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து படிப்படியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதேபோல், போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை குறித்து பேச்சுவார்த்தைக்கான துணைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே, அடுத்த வாரம் தொழிற்சங்கங்களுடன் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஊதிய உயர்வு எவ்வளவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். பிறகு, ஊதிய உயர்வு இறுதி செய்யப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்