சென்னை விமான நிலையத்தில் ரூ.82.5 லட்சம் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்: 2 பெண்கள் உட்பட 7 பேர் சிக்கினர்

By செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் ரூ.82.5 லட்சம் வெளிநாட்டு பணம், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து தாய் லாந்து செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் பயணிக்க வந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த நிலர்(30) மற்றும் அவரது தங்கை மஞ்சு(28) ஆகியோரின் உடமை களை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் முறை யான ஆவணங்கள் இல்லாமல் இருந்த வெளிநாட்டு பணம் ரூ.45 லட்சத்தை (இந்திய மதிப்பு) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானம் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி (40), அப்துல்கான் (35) ஆகியோர் முறையான ஆவணங்கள் இன்றி வைத்திருந்த வெளிநாட்டு பணம் ரூ.2 லட்சத்தை (இந்திய மதிப்பு) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோன்று பல்வேறு பயணிகளிடம் இருந்து ரூ.35.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அஸ்மத் (39) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து, அவர் வைத்திருந்த ரூ.10.5 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகளை பறி முதல் செய்தனர். கோலாலம்பூரில் இருந்து வந்த செல்வம் (30) என்பவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் மற்றும் கொழும்பில் இருந்து வந்த ஜுராஜு தீன் (35) என்பவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 82.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் மற்றும் 850 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்