பகுதிநேர சிறப்பாசிரியர்களின் மதிப்பூதியம் ரூ.7,700 ஆக உயர்த்தப்படுகிறது: ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நடைமுறை

By செய்திப்பிரிவு

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, இசை, தையல் உள்ளிட்ட பாடங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தொடக்கத்தில் ரூ.5 ஆயிரமாக இருந்த அவர்களின் மதிப்பூதியம் பின்னர் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யுமாறு அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்களின் மதிப்பூதியம் ரூ.7,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குநர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஓர் உத்தரவில், “பகுதிநேர பயிற்றுநர்களுக்கு (சிறப்பாசிரியர்கள்) தற்போது பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் மதிப்பூதியமாக ரூ.7,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரூ.7,700 ஆக உயர்த்தப்படும்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

விளையாட்டு

10 mins ago

இணைப்பிதழ்கள்

36 mins ago

தமிழகம்

46 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்