அதிமுகவின் அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது: ப.சிதம்பரம்

By செய்திப்பிரிவு

 

அதிமுகவின் அரசியல் நகைச்சுவை தரம் தாழ்ந்து, கேலிக்கூத்தாகிவிட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கூறியுள்ளார்.

அதிமுகவில் பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின், தற்போது வரை பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதுடன், புதுச்சேரிக்கு சென்றுவிட்டனர். அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர முதல்வர் பழனிசாமி எடுத்த முயற்சி எடுத்து வருகிறார்.இந்நிலையில் சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.

இந்த சூழலில் அதிமுக அரசியல் குறித்து ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அதிமுகவின் அரசியல் நகைச்சுவை தரம் தாழ்ந்து, கேலிக்கூத்தாகிவிட்டது. இத்தகைய நிலையில் தமிழக ஆளுநர் எங்கே?

தற்போதைய தமிழக அரசியல் சூழலில் குதிரை பேரம் நடைபெற அனுமதிக்கக் கூடாது'' என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ப.சிதம்பரம் ட்வீட்:

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்