ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தகவல்

By செய்திப்பிரிவு

ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும், மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண் டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழி யர் சங்கங்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த ஜூலை 18-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் கடந்த 5-ம் தேதி 60 ஆயிரம் பேர் கூடி பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். இந்நிலை யில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (22-ம் தேதி) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இளங் கோவன், கணேசன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட் டங்களுக்கு இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை. எங்களை அழைத்து பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லை.

எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை (இன்று) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் இதில் பங்கேற்பர். இதற்குப் பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் செப்டம் பர் 7-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடு படுவோம்.

தொடர் வேலைநிறுத்தத் தின்போது ஆர்ப்பாட்டம், மறியல், சிறை செல்லும் போராட்டம் என தினமும் போராட்டங்களை நடத்துவோம். இந்த முறை கோரிக் கைகளை நிறைவேற்றும்வரை போராட்டத்தைக் கைவிட மாட் டோம்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற் காக அஞ்ச மாட்டோம். மாறாக போராட்டத்தைத் தீவிரப்படுத்து வோம். எந்த மிரட்டல்களுக்கும் பணியப் போவதில்லை.

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடக்கும். எங்களின் நியாயமான கோரிக்கைகளை புறம்தள்ள வேண்டாம். அவற்றை உடனடியாக நிறைவேற்றுமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம். வேலைநிறுத்த தினத்தில் யாருக்கும் விடுப்பு அளிக்கக் கூடாது என்று தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். அது அரசின் வழக்கமான நடைமுறை. ஒருநாள் சம்பளத்தை துறந்துதான் நாங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறோம். வேலைநிறுத்தப் போராட்டத்தால் அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

வலைஞர் பக்கம்

6 mins ago

சினிமா

11 mins ago

சினிமா

16 mins ago

இந்தியா

24 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்